பரபரப்பு.. மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் தீ விபத்து என தகவல்..

Published : May 14, 2022, 04:11 PM IST
பரபரப்பு.. மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் தீ விபத்து என தகவல்..

சுருக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் மருத்துவமனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

அமிர்தசரஸ் குருநானக் தேவ் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுக்குள் கொண்டு வர 6 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

மருத்துவமனையில் தீ விபத்து ஏறப்ட்டதால் நெப்ராலஜி, தோல், மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக  வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். மேலும் மருத்துவமனை முதல்வர் ராஜூவ் குமார், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இரண்டு டிரான்ஸ்பர்மர்களில் திடீரென்று வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டது என்றும் கூறினார்.

மேலும் படிக்க: டெல்லி தீ விபத்தில் 27 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?