டெல்லியில் பயங்கர தீ விபத்து.. 27 பேர் உடல் கருகி பலி.. பலர் மாடியில் இருந்து குதித்து படுகாயங்களுடன் தப்பினர்

By vinoth kumarFirst Published May 14, 2022, 8:41 AM IST
Highlights

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. 4 மாடி கட்டிட வளாகத்தில் மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் வேகமாக பரவியது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த  24 தீயணைப்பு வாகனங்கள் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

டெல்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் போது தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பலர் ஜன்னல் வழியாக கீழே குதிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர்கள் ஹரிஸ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. 4 மாடி கட்டிட வளாகத்தில் மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் வேகமாக பரவியது. இது தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த  24 தீயணைப்பு வாகனங்கள் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

நான்கு அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் இருந்து இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் முழு தளத்திலும் இன்னும் முழுமையாக மீட்பு பணிகள் முடியவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறத.  கட்டிடத்தில் இருந்து சுமார் 60-70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தீ விபத்தில் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பலர் ஜன்னல் வழியாகவும், கயிறு மூலமாக கீழே குதித்தனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர்கள் ஹரிஸ் கோயல் மற்றும் வருண் கோயல் ஆகிய 2 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். வணிக வளாகத்திற்கு தீயணைப்பு துறையிடம் இருந்து அனுமதிச்சான்று வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

click me!