Rahul Gandhi New look: Cambridge :ராகுல் காந்தியின் 'நியூ லுக்’ ! ஹேர்கட், தாடியில்லை, நோ டிஷர்ட்

By Pothy RajFirst Published Mar 1, 2023, 2:19 PM IST
Highlights

Rahul Gandhi New look: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதிய ஸ்மார்ட் லுக்குடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ளார். அவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது

Rahul Gandhi New look: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதிய ஸ்மார்ட் லுக்குடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ளார். அவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது

பாரத் ஜோடோ யாத்திரை நடத்தியபோது, கடந்த 100நாட்களுக்கும் மேலாக முடி வெட்டாமல், தாடியை ஷேல் செய்யாமல் ராகுல் காந்தி வலம் வந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தபோதும், அதே தாடியுடனும், தலைமுடியுடனும் ராகுல் காந்தி சென்று பேசினார்.

அல்பம்! ரூ.40 லட்சம் சொகுசு காரில் வந்து G-20 மாநாட்டு பூந்தொட்டிகளைத் திருடியவர்கள் கைது

பாரத் ஜோடோ நடைபயணத்தின் முதல்நாளில் இருந்து கடைசி நாள் வரை, வெள்ளை டிஷர்ட் மட்டுமே அணிந்து நடந்தார். இந்த டிஷர்ட் குறித்து பாஜக சார்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், டிஷர்ட் விலை குறித்த வதந்திகள் வெளியாகின. ஆனால், ராகுல் காந்தி டிஷர்ட் நிறத்தை மாற்றாமல் வெள்ளை நிற டிஷர்ட்டுடனே நடந்தார்.

இந்நிலையில் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அழைக்கப்பட்டிருந்தார். அங்கு ராகுல் காந்தி சென்றவுடன் புதிய ஸ்மார்ட் லுக்குடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தை நிரப்பி வருகின்றன

தலைமுடியை சீராக வெட்டி, தாடியை ட்ரிம் செய்து, கோட்ஷூட் அணிந்து ராகுல் காந்தி புதிய ஸ்மார்ட் லுக்கில் வரும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பகிர்ந்துள்ளனர்.

 

ब्रिटेन पहुंचे श्री , कैंब्रिज यूनिवर्सिटी में देंगे लेक्चर, 'लर्निंग टू लिसन इन द 21वीं सेंचुरी' पर करेंगे चर्चा। pic.twitter.com/qzrscVkght

— Indian Youth Congress (@IYC)

முகேஷ் அம்பானி, குடும்பத்தினருக்கு உச்சபட்ச Z-plus பாதுகாப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

லண்டனுக்குச் சென்றுள்ள ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்தில் நடக்கும் கூட்டத்தில் “ 21ம் நூற்றாண்டில் கவனிக்க கற்றுக்கொள்வது” என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்ற உள்ளார். அதன்பின் வெளிநாடு வாழ்இந்தியர்களுடனும் பேசஉள்ளார். 

ராகுல் காந்தியின் நியூலுக் தற்போது ட்விட்டரில் டிரண்டாகி வருகிறது. 


 

click me!