Gir Lions: குஜராத் கிர் காடுகளில் 2 ஆண்டுகளில் 240 சிங்கங்கள் சாவு

Published : Mar 01, 2023, 01:46 PM ISTUpdated : Mar 01, 2023, 01:50 PM IST
Gir Lions: குஜராத் கிர் காடுகளில் 2 ஆண்டுகளில் 240 சிங்கங்கள் சாவு

சுருக்கம்

புகழ்பெற்ற கிர் சரணாலயத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 240 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன என்று குஜராத் மாநில அரசு கூறியுள்ளது.

ஆசிய சிங்கங்களின் ஒரே உறைவிடம் கிர் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா. இந்தச் சரணாலயம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 240 சிங்கங்களை இழந்துள்ளது. இந்த இறப்புகள் கிர் சரணாலயத்தில் இருத்த சிங்க மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 36 சதவீதம்.

டிசம்பர் 31, 2022 அன்று முடிவடைந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் கிர் சரணாலயம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் 128 குட்டிகள் உட்பட 240 சிங்கங்கள் இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான காரணங்களால் உயிரிழந்ததாக குஜராத் மாநில அரசு சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்எல்ஏ ஷைலேஷ் பர்மர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில அரசு இந்த புள்ளிவிவரங்களை வழங்கியது. மே 2020 இல், மாநில அரசாங்கம் சிங்கங்களின் எண்ணிக்கை 674 என்று மதிப்பிட்டுள்ளது, இது 2015 இன் எண்ணிக்கையான 523 ஐ விட 29% அதிகரித்துள்ளது.

Rajasthan: அரசு மருத்துவமனையில் புகுந்த தெருநாய்கள் கடித்து குழந்தை பலி

மேலும் சிங்கங்களை பாதுகாக்க நிதியுதவி கேட்டுள்ளதாகவும், ஆனால் மத்திய அரசு இன்னும் நிதியை வழங்கவில்லை என்றும் மாநில அரசு கூறியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு மானியம் வழங்குவதற்கு முன்பே வனத்துறை அதிகாரிகள், 'ப்ராஜெக்ட் லயன்' திட்டத்தை இறுதி செய்யும் பணியில் இருக்கின்றனர்.

2021 இல், சிங்கங்களின் இறப்பு எண்ணிக்கை 124 ஆகக் இருந்தது; இது 2022ல் 116 ஆகக் குறைந்தது. இந்த இரண்டு ஆண்டுகளில் இறந்த 240 சிங்கங்களில் 214 சிங்கங்கள் இயற்கை காரணங்களால் இறந்துபோயின. இருப்பினும் வன்த்துறை மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக சிங்கங்களின் இறப்பு குறையத் தொடங்கியுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

2020ஆம் ஆண்டு 159 சிங்கங்கள் இறந்தபோன நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என வனத்துறை கூறுகிறது. 2018ஆம் ஆண்டிலேயே கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றினால் 34 சிங்கங்கள் உயிரிழந்தன. அதில் இருந்து எண்ணிக்கை சிங்கங்கள் இறப்பு அதிகமாகி வருகிறது என்று வனவிலங்கு நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நோயால் ஏற்படும் மரணத்தை அரசாங்கம் எப்போதும் இயற்கை மரணம் என்றுதான் வகைப்படுத்துகிறது என்று மூத்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

Bengaluru: பெற்றோர் பேச்சைக் கேட்டு திருமணத்துக்கு மறுத்த காதலியை கொடூரமாகக் கொன்ற இளைஞர்

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ விமானத்தில் புகுந்த புறா! நடுவானில் பயணிகளுக்கு ஆச்சரியம்!
நேரு சொன்னதைத் திரிக்கும் மோடி.. வந்தே மாதரம் விவாதத்தில் பிச்சு உதறிய பிரியங்கா காந்தி!