ரயிலில் லாங் டிராவல் போறீங்களா? இனிமே சீக்கிரம் போயிடலாம்..!

First Published Oct 20, 2017, 5:36 PM IST
Highlights
train timings reduce


நீண்ட தூரம் செல்லும் 500 ரயில்களின் மொத்த பயண நேரம் 2 மணி நேரம் வரை குறைக்கப்படுகிறது. இதுகுறித்து அடுத்த மாதம் வெளியிடப்படும் புதிய ரயில் நேர அட்டவணையில் அறிவிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில்களை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். 

இது, இரண்டு வழிகளில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது. ஏதாவது ஒரு இடத்தில், திரும்பி வருவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில், வேறொரு இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். புதிய ரயில் அட்டவணையில் 50 ரயில்கள் இது போன்று பயன்படுத்தப்படும். 51 ரயில்களின் மொத்த பயண நேரம் உடனடியாக சுமார் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை குறைக்கப்படும். அதைத்தொடர்ந்து 500 ரயில்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

50 எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில்களாக மாற்ற ரயில்வே ஆய்வு செய்து வருகிறது. ரயில்களின் சராசரி வேகத்தை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. 

போபால்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் காசி-பூர்பந்தரா ஆகிய ரயில்களின் பயண நேரம் 95 நிமிடங்களும், கவுகாந்தி-இந்தூர் சிறப்பு ரயிலின் பயண நேரம் 115 நிமிடங்களும் குறைய உள்ளது.
 

click me!