
பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்கதவை தட்டாமல் உள்நுழைந்த நபருக்கு செருப்படி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள அஜய்பூர் கிராமத்தின் நூர்சராய் பிளாக்கில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது
இந்த கிராமத்தில் வசித்து வந்த வயாதான முதியவர் ஏதோ ஒரு பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து தலைவரை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்று உள்ளார்.
கதவை தட்டியது, உள்ளிருந்த இரண்டு பெண்கள் காதில் சரியாக விழவில்லை என தெரிகிறது. இதனால் உள்சென்றே பார்க்கலாம் என அந்த முதியவர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இதை காரணம் காட்டி கோபம் அடைந்த அந்த இரண்டு பெண்கள், அந்த முதியவரை செருப்பால் அடித்து உதைத்து உள்ளனர்.
மேலும், அந்த முதியவரை தரையில் எச்சில் துப்ப செய்து, அதை அவரது நாக்கால் மீண்டும் எடுக்குமாறு செய்து துன்புறுத்தி உள்ளனர் .இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
மனிதர்களில் இது போன்றும் இருக்க தான் செய்கிறார்கள். எது நியாயம் ...எது தர்மம் ....எது சரி...எதையும் சிந்திப்பது இல்லாமல் போய் விட்டது .
அதுவும் தன் சொந்த ஊரில் உள்ள ஒரு முதியவரை இவ்வாறு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.