"விவசாயிக்கு நஷ்டஈடாக எக்ஸ்பிரஸ் ரயில் பறிமுதல்" - செஷன்ஸ் கோர்ட் அதிரடி

 
Published : Mar 18, 2017, 11:57 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
"விவசாயிக்கு நஷ்டஈடாக எக்ஸ்பிரஸ் ரயில் பறிமுதல்" - செஷன்ஸ் கோர்ட் அதிரடி

சுருக்கம்

train seized for farmers

இதுவரை பல்வேறு வழக்குகளில் அலுவலகங்கள், வாகனங்கள் ஆகியவற்றை கோர்ட் ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஒரு விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்த செஷன்ஸ் 

கோர்ட், நஷ்டஈடாக எக்ஸ்ரயிலை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு இந்தியாவையே சற்று திரும்பி பார்க்க செய்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், கதானா கிராமத்தை சேர்ந்தவர் சம்பூரண் சிங். விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் இருந்தது. இவரது நிலத்தை ரயில் பாதைகள் அமைப்பதற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது.

அதற்காக ரயில்வே நிர்வாகம் சார்பில், ரூ.37 லட்சம் இழப்பீடு வழங்கியது. ஆனால் அந்த தொகை போதாது என சம்பூரண் சிங் முறையிட்டார். அதை ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து சம்பூரண் சிங், லூதியானா செஷன்ஸ் கோர்ட்டை அணுகினார். இந்த வழக்கி விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கடந்த 2005ம் ஆண்டு உத்தரவிட்டது. 

அதன்பின்னரும் ரயில்வே நிர்வாகம், விவசாயி சம்பூரண் சிங்குக்கு நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் விரக்தியடைந்த சம்பூரண்சிங், மீண்டும் கோர்ட்டை நாடினார்.

செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டும், ரயில்வே நிர்வாகம் நஷ்டஈடு வழங்காததை கண்டித்த நீதிபதி, அமிர்தசரஸ் –டெல்லி இடையே இயக்கப்படும் சுவர்ண சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்யுமாறு கடந்த கட்ந்த 15ம் 

தேதி உத்தரவிட்டார். மேலும், லூதியானா ரயில் நிலைய சூப்பிரண்டின் ஒரு அறையையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பளித்தார்.

பல்வேறு விபத்து வழக்குகளில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இழப்பீடு வழங்குவதற்காக எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்ய 

கோர்ட் உத்தரவிட்ட சம்பவம் பெரும் சுவாரஸ்யமான அதிர்ச்சியாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!