
உத்தரபிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மத்திய பிரதேச அரசு 2 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பாட்னாவிலிருந்து இந்தூர் நோக்கி சென்ற விரைவு ரயில், காலையில் கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 14 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த கோர விபத்தால் ரயிலில் பயணம் செய்த 100 பேர் பலியாகினர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினரும், போலீசாரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களுக்கு உத்தரபிரதேச அரசு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50000 வழங்குவதாக அறிவித்தது.
மேலும், விபத்தில் பலியானவர்களின் குடுமபத்தினருக்கு மத்திய பிரதேச அரசு 2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50,000 வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், விபத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.