
சீனாவின் புஸ்ஹாவோ நகரில் நடந்த சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
சீனாவின் புல்ஹாவோ நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் போட்டி நடந்து வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் தரவரிசையில் 9-ம் இடத்தில் உள்ள சீனாவின் சன் யுவை எதிர்கொண்டார் தரவரிசையில் 11-ம் இடத்தில் உள்ள பி.வி.சிந்து.
பரபரப்பாக ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை சன் யுவை 21-11,17-21,21-11 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்து, அதன்பின் நடந்த டென்மார்க், பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் 2-வது சுற்றிலேயே வெளியேறினார்.
இந்நிலையில், சூப்பர் சீரிஸ் போட்டியில் பங்கேற்று சிந்து வெல்லும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.