
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறும் முன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை பேஸ்புக்கில் இயக்குநர் சுமன் கோஷ் வௌியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குறித்த ஆவணப்படத்தை பொருளாதார அறிஞர் சுமன்கோஷ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ‘ தி ஆர்குமென்டேட்டிவ் இந்தியன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் பெற மத்திய திரைப்பட தணிக்கைவாரியத்ைத இயக்குநர் சுமன் கோஷ் அனுகினார். இந்த ஆவணப்படத்தை பார்த்த தணிக்கை துறையின் தலைமை அதிகாரி பங்கஞ் நில்ஹலானி, படத்தில் வரும் பசு, குஜராத், இந்துத்துவா, இந்து இந்தியா ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை துறையின் அனுமதி பெறாமலேயேபேஸ்புக்கில் இயக்குநர் சுமன் கோஷ், அமர்த்தியா சென் குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை நீக்காமல் முன்னோட்ட காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று தணிக்கை உத்தரவிட்டு இருந்தது. இருப்பினும் வௌியான முன்னோட்ட காட்சிகளில் அந்த வார்த்தைகளும் இடம் பெறவில்லை
இது குறித்து இயக்குநர் சுமன் கோஷ் பேஸ்புக்கில் வௌியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது-
கடந்த 14-ந்தேதி அமர்த்தியா சென் குறித்த தி அர்குமென்டேட்டிவ் இந்தியன் ஆவணப்படத்தை வௌியிடத் திட்டமிட்டு இருந்தேன். அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால், படத்தின் முன்னோட்ட காட்சிகளை மட்டும்வௌியிட்டுள்ளேன்.
இது பிடித்திருந்தால், நீங்கள் பகிருங்கள். நாடுமுழுவதும் மக்கள், ஊடகங்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். முன்னோட்டக் காட்சிகளை இணையதளத்தில் வௌியிடவும் தடைகள் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், அனைத்தையும் மீறி காட்சிகள் வெளியானது’’ எனத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தணிக்கை துறையின் சான்றிதழ் இல்லாமல் சுமன் கோஷ் ஆவணப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை வௌியிட்டது சட்டவிரோதம். தணிக்கை செய்யப்படாத காட்சிகளை மக்கள் பார்க்கும் வகையில்வௌியிடக்கூடாது என்று தணிக்கை துறையின் தலைவர் நில்ஹானிதெரிவித்துள்ளார்.