
பெங்களூருவில், இருசக்கர வாகன ஓட்டி மமீது போக்குவரத்து போலீசார் தன் செருப்பை கழட்டி வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கட்டாயம் உள்ளது.. இதனை மத்திய மற்றும் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது..
ஆனாலும் பொதுமக்கள் பலர் என்ன சொல்லியும் கேட்பது கிடையாது...இந்நிலையில், போக்குவரத்து போலீசார் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் ஹெல்மெட் அணியாமல் வருவதை பார்த்துவட்டு அவர்களை நிறுத்த முற்படுவதற்கு பதிலாக செருப்பை கழட்டி அவர்கள் மீது வீசுகிறார்.
இந்த வீடியோ காட்சி தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த ரெஷாஃபா சாட்டர்ஜி என்பவர், தனது மகநூல் பக்கத்தில் தொடர்ந்து பல வீடியோக்களை பகிருந்து வருகிறார்.
அதில் இந்த வீடியோவும் ஒன்று, செருப்பை வீசும் போக்குவரத்து காவலருக்கு சமூகவலைத்தளத்தில் அதிகமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் செல்வதும், செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்குவதும் வாடிக்கையாக வைத்து உள்ளனர் மக்கள்.
உயிரிழப்புகளை தவிர்க்க கண்டிப்பாக மக்கள் கொஞ்சமாவது மாற வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும் உள்ளது