
உயிருக்கு உயிராக வாழ்ந்த கள்ளக்காதலன் இறந்ததால் சோகத்தில் பெற்ற மகளையே விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் சுஜித்ரா. சொந்த ஊர் கேரளா மாநிலம். இவரது கணவர் சுரேஷ். இவர்களது ஒரே மகள் நிவேதா. 5ம் வகுப்பு படித்து வந்தாள். 7 வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சுரேஷ் பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில், குயிலாபாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரனுடன் சுஜித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தனர். இவர் கடந்த 2 வருடத்துக்கு முன்பு கார் விபத்தில் பிரபாகரன் இறந்தார். தாலி கட்டிய கணவனும் விட்டு பிரிந்து விட்டார். சொந்தமென்று சொல்லிக் கொள்ள யாருமில்லை, ஆதரவாக இருந்த அவரும் இறந்து போய்விட்டார். என அவர் இறந்தது முதல் சோகத்தில் மூழ்கி இருந்த சுஜித்ரா, இதனால் நேற்று முன்தினம் இரவு குளுக்கோசில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து மகளை கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து, தானும் தூக்கு போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவயு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.