கூகுள் நாரதரா... குழப்பமா இருக்கே...!

First Published May 1, 2018, 1:53 PM IST
Highlights
Narad is a google -vijay rupani


குஜராத் முதல்வர் விஜய்ரூபானி நாரதரை அந்த காலத்து கூகுள் என பேசியுள்ளார். திரிபுரா முதல்வர்  பிப்லோ தேவ் மகாபாராத காலத்திலேயே, இன்டர்நெட், செயற்கைகோள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் பின்னர், ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் கொடுத்ததில் நியாயம் இருக்கிறது. ஆனால் டயானா ஹெய்டனுக்கு உலக அழகி பட்டம் ஏன் கொடுத்தார்கள் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 

இவை அனைத்திற்கும் மகுடம் வைத்த்து போல், படித்த இளைஞர்கள் வேலை தேடி அரசியல்வாதிகள் பின்னால் செல்லாமல், பீடா கடை வைத்து பிழைக்கலாம் அல்லது மாடு மேய்க்கலாம் என தெரிவித்தார்.

இவரைப் போலவே இப்போது குஜராத் முதல்வர் விஜய்ரூபானி, வேதங்களில் நாரதர் பற்றி எழுதப்பட்டுள்ளது. நாரதரானவர் இன்றைய கூகுளைப் போல. ஏனெனில் உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நாரதருக்கு தெரியும். நாரதர் அனைத்து தகவல்களையும் அறிந்து ஒட்டுமொத்த இந்த உலகத்துக்கே அதை தெரிவித்தவர் என கூறியுள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து வருகிறது. பா.ஜ.கவின் முக்கிய ஆளுமைகள் கருத்தை மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.

click me!