காற்று மாசில் சிக்கிய டெல்லி - சிம்லாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 02:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
காற்று மாசில் சிக்கிய டெல்லி - சிம்லாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சுருக்கம்

தலைநகர் டெல்லியி்ல் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக உள்ளூர் மக்களும் சிம்லாவுக்கு படையெடுக்கின்றனர். அத்துடன் டெல்லிக்கு போக திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகளும் தங்களது பயணத்திட்டத்தை மாற்றி சிம்லாவுக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

விடுமுறையில் டெல்லி சென்று குழந்தைகளுக்கு வரலாற்று நினைவு சின்னங்களை சுற்றி காண்பிக்க நினைத்ததாகவும், தற்போது டெல்லியில் உள்ள சூழலை அறிந்து பயணத்தை சிம்லாவுக்கு மாற்றி விட்டதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்து தங்கி, ஊர் முழுவதும் சுற்றி பார்க்க ஏரானமா சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக சிம்லாவுக்கு செல்கின்றர். பல பயணிகள் டெல்லியை தவிர்த்து சிம்லாவுக்கு படையெடுத்துள்ளதால் ரயில் நிலையங்கள், ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன.  

PREV
click me!

Recommended Stories

Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
இந்தியர்களுக்கு ஜாக்பாட்.! தென்னிந்தியாவில் புதிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு.! வருடத்துக்கு எவ்வளவு கிலோ தங்கம் கிடைக்கும் தெரியுமா?