கேரளா படகு விபத்து; குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழப்பு!!

By Narendran S  |  First Published May 7, 2023, 10:49 PM IST

கேரளாவில் சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


கேரளாவில் சுற்றுலா படகு மூழ்கிய விபத்தில் குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டம் தனுர் அருகே உள்ள தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் நான்கு குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இதுவரை 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் 2023: காங்கிரஸ் வளர்ச்சி பேனாவிலும், பேப்பரிலும் மட்டுமே இருக்கு - பிரதமர் மோடி தாக்கு

Tap to resize

Latest Videos

தனுர், திரூர் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் மற்றும் அப்பகுதியினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவர்களின் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் மாயம்.. மனித கடத்தல், விபச்சாரத்துக்கு தள்ளப்படும் கொடுமை - என்சிஆர்பி தகவல்

படகு மூழ்கிய பகுதியில் வெளிச்சமின்மையால் மீட்பு பணியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. படகில் 35க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனுர் ஒட்டும்புரம் துவால்த்திரம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு மூழ்கிய சம்பவத்தில் மீட்புப் பணிகளை அவசர நிலையில் மேற்கொள்ளுமாறு மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

click me!