
இவர்களில் 10 பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் அடங்குவர், அவர்களில் ஆறு பேர் தானே நகரைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் கல்யாண் நகரை சேர்ந்தவர்கள், மேலும் 3 பேர் சஹாபூரைச் சேர்ந்தவர்கள், பிவாண்டி, உல்ஹாஸ்நகர் மற்றும் கோவண்டியில் இருந்து தலா ஒருவர் (மும்பையில்), ஒரு நோயாளி வேறு இடத்திலிருந்து வந்தவர் மற்றும் ஒருவர் குறித்து தகவல்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் 12 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று திரு. பங்கர் மேலும் கூறினார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு. பங்கர், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்ததாகவும், சுகாதார சேவைகள் ஆணையர் தலைமையில் ஆட்சியர், குடிமைத் தலைவர், சுகாதார இயக்குநர் ஆகியோர் அடங்கிய ஒரு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
Crime : மைனர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு ஊழியர்.. போலீசிடம் வசமாக சிக்கிய சம்பவம்
இறந்த அந்த நோயாளிகளுக்கு சிறுநீரக கல், நாள்பட்ட பக்கவாதம், அல்சர், நிமோனியா, செப்டிசீமியா போன்ற சிக்கல்கள் இருந்தன, என்றார் அவர். "சிகிச்சையின் வரிசை ஆய்வு செய்யப்படும் மற்றும் இறந்தவர்களின் உறவினர்களின் அறிக்கைகள் பதிவு செய்யப்படும் என்றும், இவை அனைத்தையும் விசாரணைக் குழு கவனிக்கும் என்று, திரு. பங்கர் கூறினார்.
"500 பேர் கொண்ட முழு நேர COVID ஊழியர்களும் இந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும், மேலும் கூடுதல் நர்சிங் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, மாநில சுகாதார அமைச்சர் தானாஜி சாவந்த், மருத்துவமனையின் டீனிடம் இரண்டு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் தானே முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் பேசுகையில், இறப்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், பதிவுகள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக பல குடிமை அதிகாரிகள் அங்கு ஒன்றுகூடியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஊடகங்களிடம் பேசிய துணை போலீஸ் கமிஷனர் கணேஷ் கவ்டே, "கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் இறந்ததாக எங்களிடம் தகவல் உள்ளது. ஒரு நாளைக்கு வழக்கமான இந்த எண்ணிக்கை ஆறு முதல் ஏழு என்ற அளவில் தான் இருக்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது." "இறந்த அனைவரும் சிகிச்சையின் போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் கூறியது. அதிக எண்ணிக்கையிலான இறப்புகளால் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று டிசிபி தெரிவித்தார்.
"Mera Mati Mera Desh".. நாட்டிற்காக பாடுபட்ட ராணுவ வீரர்களை கௌரவிக்கும் தருணம் - ராஜீவ் சந்திரசேகர்