சந்திரயான் முதல் ஒடிசா ரயில் விபத்து வரை.. 2023-ல் அதிகம் தேடப்பட்ட செய்திகள் லிஸ்ட் இதோ..

By Ramya s  |  First Published Dec 12, 2023, 8:58 AM IST

2023-ல் இந்தியாவில் கூகுளில் அதிகமாக தேடப்பட்ட செய்தி நிகழ்வுகள் பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.


2023 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டிற்கான சிறந்த தேடல்களை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இணையத் தேடல்களில் ஆதிக்கம் செலுத்திய தலைப்புகள், கேள்விகள் மற்றும் ஆர்வங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில். சந்திரயான்-3 மற்றும் ஜி20 ஆகியவை நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததது என்றும் இந்தியாவின் சிறந்த பிரபலமான தேடல்களின் பட்டியலில் பிரதிபலித்தது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் Year in Search 2023' என்ற பெயரில் வெளியிட்ட பதிவில் சந்திரயான்-3 இன் வரலாற்று வெற்றி தலைப்பு செய்தி தொடர்பான நிகழ்வுகள், விண்வெளியில் இருந்து வானளாவிய பயணம் உள்ளூர் மற்றும் உலகளாவிய தேடல்களைத் தூண்டியது. இந்தியாவின் G20 தலைமை தொடர்பாக 'What Is G20' தேடல் மற்றும் கேள்விகள் கணிசமான ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றன," என்று தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மற்ற செய்திகள் தொடர்பான கேள்விகள், கர்நாடக தேர்தல் முடிவுகள் முதல் பொது சிவில் சட்டம் வரை மக்கள் தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டதை காட்டியது, அதே நேரத்தில் இஸ்ரேல் செய்திகள் மற்றும் துருக்கி நிலநடுக்கம் பற்றிய தேடல்கள் மூலம் உலகளாவிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள பலர் கூகுளில் தேடி உள்ளனர். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

2023-ல் அதிகம் தேடப்பட்ட செய்திகள்

  • சந்திரயான்-3
  • கர்நாடக தேர்தல் முடிவுகள்
  • இஸ்ரேல் செய்திகள்
  • சதீஷ் கௌசிக்
  • பட்ஜெட் 2023
  • துருக்கி நிலநடுக்கம்
  • அதிக் அகமது
  • மேத்யூ பெர்ரி
  • மணிப்பூர் செய்திகள்
  • ஒடிசா ரயில் விபத்து

இந்த செய்திகள் தவிர மக்கள் சுய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் காட்டினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல் மற்றும் முடிக்கு சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை எப்படி தடுப்பது என்று பலரும் கூகுளில் தேடி உள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் 'YouTubeல் எனது முதல் 5K பின்தொடர்பவர்களை எவ்வாறு அடைவது' என்பதை அறிய ஆவல் காட்டினர்..

நீங்கள் ஒரு விவசாயியா.? மத்திய அரசின் திட்டத்தின் கீழ் உங்களுக்கு ரூ. 12,000 கிடைக்கும்..

"கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் இந்தியா vs ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக அதிகம் கூகுளில்  இந்திய கிரிக்கெட் அணி, உலகளவில் சிறந்த டிரெண்டிங் கிரிக்கெட் அணியாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சுப்மான் கில் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகிய கிரிக்கெட் வீரர்ளும் அதிகமாக கூகுளில் தேடப்பட்டனர். இதன் மூலம் உள்நாட்டிலும் உலக அளவிலும் சிறந்த டிரெண்டிங் கிரிக்கெட் வீரர்களாக உருவெடுத்தனர்.

click me!