நாட்டின் பாதுகாப்பான நகரம் எது? தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வழங்கும் டாப் 10 பட்டியல்!

By SG Balan  |  First Published Dec 11, 2023, 5:27 PM IST

நாட்டின் 2வது பாதுகாப்பான நகரமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை விளங்குகிறது. 3வது இடத்தில் கோவை உள்ளது.


நாட்டிலேயே பாதுகாப்பானவை என்று நற்பெயரைப் பெற்றுள்ள இந்தியாவின் சிறந்த 10 நகரங்கள் எவை? அந்த நகரங்களில் காணப்படும் பாதுகாப்பான சூழலுக்கு என்ன காரணம் என்பதைப் அறிந்துகொள்ளலாம்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கையின்படி, மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 78.2 என்ற குற்ற விகிதத்துடன் (IPC rate) இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக நீடிக்கிறது.

Tap to resize

Latest Videos

புதிய சகாப்தம் ஆரம்பம்! சட்டபிரிவு 370 ஐ நீக்க மோடி அரசின் நடவடிக்கையைப் பாராட்டும் ராணுவ வீரர்கள்!

இந்தியாவில் பல நகரங்கள் பாதுகாப்பாக வசிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த நகரங்கள் குறைந்த குற்ற விகிதங்கள் அடிப்படையில் பாதுகாப்பானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை அங்கு வசிப்பவர்களுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன.

சட்ட அமலாக்கம், சமூக ஈடுபாடு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவை இந்த நகரங்களின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. இதனால், குற்றங்கள் மிகக் குறைவாக இருப்பது மட்டுமின்றி பாதுகாப்பு உணர்வும் ஏற்படுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) என்பது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் உள்ளூர் சட்டங்கள் (SLL) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றம் தொடர்பான தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யும் பணியில் உள்ள அரசாங்க அமைப்பாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

கொல்கத்தாவுக்கு அடுத்த 2வது பாதுகாப்பான நகரமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை விளங்குகிறது. சென்னையில் குற்ற விகிதம் 178.5 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு நகரமான கோயம்புத்தூர் பிடித்துள்ளது. கோவையில் குற்ற விகிதம் 211.2 ஆக உள்ளது.

புதிய ஜம்மு காஷ்மீர்! நனவாகத் தொடங்கிய பிரதமர் மோடியின் நெடுங்காலக் கனவு!

click me!