மணமகனின் பிறப்புறுப்பை 'கட்' பண்ண மர்ம கும்பல்! நண்பர்களுடன் ஆட மறுத்த நடிகையை போட்டு தள்ளிய கணவன்!

 
Published : Feb 04, 2018, 04:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
மணமகனின் பிறப்புறுப்பை 'கட்' பண்ண மர்ம கும்பல்! நண்பர்களுடன் ஆட மறுத்த நடிகையை போட்டு தள்ளிய கணவன்!

சுருக்கம்

Today Special Bit in crime news

மகளின் காதலனை கழுத்தறுத்து கொன்ற பெற்றோர்...

இந்து பையனும் முஸ்லீம் மதத்தை சார்ந்த ஒரு பெண்ணும்  பெண்ணும் கடந்த 8 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விஷயம் இரு குடும்பத்தை தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. இவர்கள் ஒரே காலணியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது. இதனால் அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் பிரச்சனை செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணிற்கு திருமணம் செய்யவும் முடிவெடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த பெண் அங்கித்துடன் ஓடிப்போக திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக தன் குடும்பத்தாரை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு டெல்லி ரயில் நிலையத்திற்கு ஓடிப்போக முடிவெடுத்துள்ளார். ஆனால் அந்த குடும்பம் கடைசி நேரத்தில் பூட்டை உடைத்து தப்பித்து இருக்கிறது. வெளியே வந்த பெண்ணின் குடும்பம் அந்த பெண்ணை அடித்து உள்ளது. அதே காலனியில் வசித்து வரும் அங்கித்தின் அம்மாவையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அங்கித்தை எல்லோர் முன்னிலையிலும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பெண்ணின் குடும்பத்தார் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

"மருத்துவமனை தூக்கு போட்டு இறந்த நர்ஸ்"

நெல்லை மாவட்டத்தில் தனியார் கண் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு செவிலியருக்குப் படிக்கும் மாணவிகள் பலர் அங்கேயே பணிபுரிகிறார்கள். மருத்துவமனையில் தங்குவதற்கு பல அறைகள் உள்ளதால் பல மாணவிகள் அங்கேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மருத்துவமனை திண்டுக்கல்லை சேர்ந்த 18 வயதான உஷாமேரி என்ற நர்ஸ் நேற்று மதியம் தனது அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து நர்ஸ் உஷாமேரியின் மரணத்தில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"மணமகனின் பிறப்புறுப்பை மர்ம துண்டித்த மர்ம நபர்கள்"

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இளைஞர் ஒருவருக்கு, பிப்ரவரி 6 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் திருமணமாக உள்ள இளைஞரின் பிறப்புறுப்பை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.
மலம் கழிப்பதற்காக அருகிலிருந்த ஆற்றுப்பகுதிக்கு சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத இரண்டு பேர் தாக்கியுள்ளனர். பின்னர், அவரின் பிறப்புறுப்பை, துண்டித்து எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை யார் செய்தது எனவும், அதற்கான காரணம் குறித்த எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான இளைஞரின் பிறப்புறுப்பை மர்ம நபர்கல் துண்டுத்து எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 விருந்துக்கு வர மறுத்த நடிகை சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் பெஷாவர் அருகேயுள்ள மார்தான் நகரை சேர்ந்த நடன நடிகை சும்பால் கான் நேற்று இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அவரை ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு தங்களுடன் வந்து நடனமாட வேண்டும் என அழைத்தனர்.

அதற்கு அவர் மறுத்து விட்டார். அவர்கள் 3 பேரையும் வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நடிகை சும்பால் கானை சரமாரியாக சுட்டனர்.இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது. அவர்களில் ஒருவர் பெயர் நயீம் கத்தக். இவர் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார்.

மற்றொருவர் ஜெகாங்கீர் கான். இவர் கொல்லப்பட்ட நடிகை சும்பால்கானின் முன்னாள் கணவர். மற்றொருவர் டாக்சி டிரைவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!