டெல்லியில் குடிசைப்பகுதி மக்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட 3ஆயிரத்து 24 வீடுகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
டெல்லியில் குடிசைப்பகுதி மக்களுக்காக கட்டி முடிக்கப்பட்ட 3ஆயிரத்து 24 வீடுகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
டெல்லியில் உள்ள கர்காஜ் பகுதியில் குடிசைப் பகுதி மக்களுக்காக “ குடிசைவாழ் மக்கள் புனரமைப்புத் திட்டம்” செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 24 வீடுகள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டு, பணிகள் நடந்து முடிந்தன.
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி… மோர்பி பாலம் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்!!
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு பிரதமர் மோடி புதிய வீடுகளுக்கான சாவியை வழங்க உள்ளார்.
அனைவருக்கும் வீடு வழங்கும் பிரதமர் திட்டத்தின் கீழ் இந்த புதிய வீடுகள் டெல்லி மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள ஜெக்கி சோப்ரி பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும், வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும், ஆரோக்கியமான சூழல் நிலவ வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன
பிரிட்டிஷ் ராணுவம் கொன்ற மான்கார் தாம் பழங்குடியினர் - நினைவுச்சின்னமாக அறிவித்தார் பிரதமர் மோடி !!
டெல்லி மேம்பாட்டு வாரியம் 3 விதமான குடிசை மேம்பாட்டு திட்டங்களை செய்து வருகிறது. கல்காஜ் நீட்டிப்பு பகுதி, ஜெயிலர்வாலா பாக், காத்புட்லி காலணி ஆகியவை அடங்கும். கல்காஜ் நீட்டிப்பு திட்டத்தில் பூமிஹீன் கேம்ப், நவ்ஜீவன் கேம்ப் ஆகிய 3 திட்டங்களும் அடங்கும்.
முதல் திட்டத்தின் கீழ் 3 ஆயிரத்து 24 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 2ம் கட்டப்பணியில், நவ்ஜீவன் கேம்ப், ஜவஹர் கேம்ப் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தற்போது கல்காஜ் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட 3 ஆயிரத்து 24 வீடுகள் இன்று பயனாளிகளிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தவுடன் அவர்கள் புதிய வீட்டில் குடியேறும் வகையில் தயார் நிலையில் உள்ளது.
குஜராத் மோர்பி தொங்கு பால விபத்து - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை
இந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவீடுகள் ரூ.345 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. தரைக்கு டைல்ஸ், செராமிஸ் டைல்ஸ், உதய்பூர் பச்சை மார்பில், நவீனமான சமையலறை, கழிப்பறை வசதி, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, லிப்ட், பூமிக்கு அடியில் குடிநீர் சேமிப்புத் தொட்டி, சிறிய மின்நிலையம், பூங்கா, இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து வசதிகளும் நிரம்பிய வகையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.