சிறையில் உல்லாசம்.! அமைச்சருக்கு 60 கோடி கொடுத்த சுகேஷ் சந்திரசேகர் - அதிர்ச்சியில் ஆம் ஆத்மி

By Raghupati R  |  First Published Nov 1, 2022, 7:52 PM IST

சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்கு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயினுக்கு, இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலா, ஓபிஎஸ் அணிகள் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரியதால், அச்சின்னம் முடக்கப்பட்டது. அப்போது, டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். 

இரட்டை இலை சின்னம்: 

Tap to resize

Latest Videos

அவரிடம், டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, சசிகலா அணி தரப்பில் குறுக்குவழியில் முயற்சிகள் நடந்ததாகவும் அப்போது, சசிகலா தரப்பு தன்னை தொடர்பு கொண்டதாகவும் அவர் கூறினார். இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி தினகரன் தரப்பில் 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் அட்வான்ஸாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க..ட்விட்டரில் எலான் மஸ்கிற்கு உதவி செய்யும் சென்னை இளைஞர்.. யார் இந்த ஸ்ரீராம்.?

சுகேஷ் சந்திரசேகர்:

அந்த விசாரணையில்தான், அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரிய வந்தது.  பல தொழில் அதிபர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் சுகேஷ் சந்திர சேகர். மோசடி பணத்தில் தனக்கு நெருக்கமான பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு குதிரை உட்பட ரூ.5 கோடிக்கு மேல் பரிசுப் பொருட்களை அளித்துள்ளார். 

இதனால் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான நிதி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸையும் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்தது. சுகேஷ் சந்திர சேகர் டெல்லி ரோஹினி சிறையில் இருந்தபோது, சிறை அதிகாரிகள் மாதம் ரூ. 1.5 கோடி லஞ்சம் பெற்று வந்தனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 81 அதிகாரிகள் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்:

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநர் சக்சேனாவுக்கு தன் வழக்கறிஞர் மூலம் எழுதியிருக்கும் கடிதத்தில், தான் சிறையில் பாதுகாப்பாக இருக்க ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். எனக்கு சிறையில் கடுமையான துன்புறுத்தலும், அச்சுறுத்தலும் இருந்தது. இதற்காக பாதுகாப்பு கட்டணமாக அமைச்சருக்கு இந்தப் பணத்தை கொடுத்தேன்.

இதையும் படிங்க..சென்னையில் அனுமதியின்றி போராட்டம்.. பாஜக தலைவர் அண்ணாமலை கைது - பரபரப்பு !

சிறையில் பாதுகாப்பு:

அதோடு தென்னிந்தியாவில் கட்சியில் முக்கிய பதவி வாங்கி கொடுப்பதாகவும், ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கிடைக்க உதவுதாகவும் தெரிவித்திருந்தார். இதற்காகவும் சேர்த்து மொத்தம் ரூ.50 கோடியை ஆம் ஆத்மி அமைச்சரிடம் கொடுத்தேன். 2017 ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்ட பிறகு சத்யேந்தர் ஜெயின் பல முறை சிறைக்கு வந்து என்னை பார்த்துச் சென்றார். 2019-ம் ஆண்டு மீண்டும் என்னை வந்து சந்தித்தார்.

டெல்லி ஆளுநருக்கு கடிதம்:

அவர் செயலாளர் ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு கட்டணமாகவும், சிறையில் தேவையான வசதிகள் கிடைக்கவும் ரூ.2 கோடி கொடுக்கவேண்டும் என்று சொன்னார். சத்யேந்தர் ஜெயினை எனக்கு 2015-ம் ஆண்டிலிருந்து தெரியும். சத்யேந்தர் என்னை சந்தித்து அவர் மீதான புகாரை திரும்பப் பெறும்படி மிரட்டினார். இந்தக் கடிதத்தை டெல்லி தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் அனுப்பி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி மறுப்பு:

அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது சுகேஷ் சந்திரசேகர் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். குஜராத் கேபிள் பாலம் விபத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி இது என்று கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதையும் படிங்க..தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்த போகுது கனமழை.. மக்களே உஷார் !!

click me!