தமிழகம் முழுவதும் இன்று உற்சாகக் கொண்டாட்டம் !!! களை கட்டிய தீபாவளிப் பண்டிகை !!!

 
Published : Oct 18, 2017, 06:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
தமிழகம் முழுவதும் இன்று உற்சாகக் கொண்டாட்டம் !!! களை கட்டிய தீபாவளிப் பண்டிகை !!!

சுருக்கம்

today diwali festivel celebrate all over india

தமிழகம் முழுவதும் இன்று உற்சாகக் கொண்டாட்டம் !!! களை கட்டிய தீபாவளிப் பண்டிகை !!!

தீபாவளைப் பண்டிகை நாடு முழுவதும் இன்று உற்சாகமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடைகள் அணிந்து, பிரார்த்தனை செய்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையாக தீபாவளி நாடு முழுவதும் கொண்டாடப்படும். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் இந்த பண்டிகை தமிழகத்திலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

பொதுமக்கள் இன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். சிறுவர், சிறுமிகள் புத்தாடையுடன் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளியைக் கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

சென்னை, மதுரை,திருச்சி,கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீபாவளியையொட்டி தமிழகத்தின அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்களும் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.மெர்சல் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் உற்சாகம் களை கட்டியுள்ளது.

தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் கூடுதலாக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

H-1B visa: இந்திய குடும்பங்களை பிரிக்கும் டிரம்ப் உத்தரவு.! ஆளுக்கொரு நாட்டில் வசிக்கும் தம்பதிகள்.!
Shivraj Patil: முன்னாள் உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சிவ்ராஜ் பாட்டீல் காலமானார்