டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி யை எதிர்த்து  வேலை நிறுத்தம் !!  இன்றும்,  நாளையும்  லாரிகள் ஓடாது !!!

Asianet News Tamil  
Published : Oct 09, 2017, 07:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி யை எதிர்த்து  வேலை நிறுத்தம் !!  இன்றும்,  நாளையும்  லாரிகள் ஓடாது !!!

சுருக்கம்

today and tommorrow lorry strike

ஜிஎஸ்டி, டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 93 லட்சம் லாரிகள், 50 லட்சம் தனியார் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகன உரிமையாளர் சங்கங்கள் ஆகியவை   இன்றும், நாளையும்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

ஜிஎஸ்டியில்  உள்ள  தெளிவற்ற  அம்சங்களை  நீக்கவும், அதில் உள்ள குழப்பங்களை  களையவும் , டீசல் விலையை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்காமல், காலாண்டு முறையில்  நிர்ணயம் செய்ய வேண்டும்  என வலியுறுத்தி  நாடு முழுவதும் இன்றும் நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக . அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், அகில இந்திய போக்குவரத்து நலச்சங்கங்களின் தலைவர்கள் ஏற்கெனவே கூறியிருந்தனர்.

அதன்படி   தமிழகத்தில்    இன்றும், நாளையும்  5 லட்சம் லாரிகள் ஓடாது என்றும், ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர்.

நாடு முழுவதும், 93 லட்சம்  லாரிகள்  ஓடாது என்றும்,  2 நாளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றும்,  வேலைநிறுத்த போராட்டத்துக்கு பிறகு மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்தி, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிக்கும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!
குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்