உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கட்டமைப்போம்.. பிரதமர் நரேந்திர மோடி சூளுரை..!

By manimegalai aFirst Published Oct 15, 2021, 7:12 PM IST
Highlights

சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.

சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.

இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் 41 ஆயுத தொழிற்சாலைகளை 7 நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த நிறுவனங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் பல பெரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.  முன்பை இருந்ததை விட தற்போது அதிக வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை. சுயசார்பு இந்தியா' கொள்கையின் கீழ், இந்தியாவை தனது சொந்த பலத்தில் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதையும், நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத்துவதுமே, நாட்டின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேக் இன் இந்தியா எண்ற தாரக மந்திரத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டுள்ளது. புதிய எதிர்காலத்திற்காக தேசம் உறுதிபூண்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது நீண்ட காலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த 7 நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

click me!