நாடாளுமன்றம் மீண்டும் கூடும் தேதி…? எதிர்க்கட்சிகளின் சூப்பர் பிளான்…

Published : Oct 14, 2021, 09:38 PM IST
நாடாளுமன்றம் மீண்டும் கூடும் தேதி…? எதிர்க்கட்சிகளின் சூப்பர் பிளான்…

சுருக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 22ம் தேதி கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 22ம் தேதி கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம், பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் திட்டமிட்டு நாளுக்கு முன்னதாகவே ஆகஸ்ட் 11ம் தேதி முடிவுக்கு வந்தது.

இந் நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை டிசம்பர் 23ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக நவம்பவர் 14ம் தேதி கூட்டத்தொடர் கூட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முறை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முக்கிய பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட  முக்கிய கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

RAC டிக்கெட் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்.. ரயில் கிளம்பிய பிறகும் பெர்த் கிடைக்கும்!
Diwali Special Trains: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? இந்த சிறப்பு ரயில்களில் சீட் காலியா இருக்கு!