வாவ் சூப்பர் அறிவிப்பு… இந்த தேதியில் இருந்து 100 சதவீதம் இருக்கைகளுடன் பறக்க அனுமதியளித்த மத்திய அரசு..!

By manimegalai aFirst Published Oct 12, 2021, 5:07 PM IST
Highlights

கொரோனா பொதுமுடக்க காலத்தில் சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. வெளிநாட்டில் சிக்கியவர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கொரோனா பொதுமுடக்க காலத்தில் சரக்கு போக்குவரத்திற்காக மட்டுமே உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. வெளிநாட்டில் சிக்கியவர்களை மீட்க வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு விதிகள் பிறப்பிக்கப்பட்டன. அப்போது சர்வதேச விமான போக்குவரத்து சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. பின்னர் உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. வணிக போக்குவர்த்திற்காக மட்டுமே உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டன. வெளிநாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வர வந்தே பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த பின்னர் சர்வதேச நாடுகள் விமான போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. முழுமையான விமான சேவைகள் தொடங்கியிருந்தாலும் ஒவ்வொரு விமானத்திலும் இருக்கைகளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்திய அரசை பொருத்தவரை, விமானங்களில் முதற்கட்டமாக 35 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் 50%, 85 சதவீதம் என இருக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் விசாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நிலையில், சமீபத்தில் அந்த விதிகளையும் மத்திய அரசு தளர்த்தியது.

இந்நிலையில், உள்நாட்டு விமான சேவையில் பயணிகள் இருக்கைகளுக்கு விஹ்டிக்கபப்ட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்தி மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வரும் 15-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் 100 சதவீதம் இருக்கைகளுடன் விமானங்கள் பறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் மாநில அரசுகள் விதித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

click me!