ராமர் கோயில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம் எப்படி சாத்தியமானது..? அமித்ஷா சொன்ன ஒற்றை தகவல்.!

By Asianet TamilFirst Published Oct 15, 2021, 8:02 AM IST
Highlights

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்காவிட்டால் ராமர் கோவில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து போன்றவை சாத்தியம் ஆகியிருக்குமா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
 

பாஜக சார்பில் கோவாவில் கார்யகர்டா சம்மேளன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். “'கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 2022ம் ஆண்டில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் கோவாவில் அமைய வேண்டும். இங்கே ஒன்றை யோசித்துப்பாருங்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்காவிட்டால் ராமர் கோவில், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து போன்றவை சாத்தியம் ஆகியிருக்குமா? சொல்லுங்கள் நண்பர்களே.
 நாடு சுதந்திரத்திற்கு முன்னும் சரி முன்னும் பின்னும் சரி எத்தனையோ கட்சிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. எத்தனை  அரசியல் கட்சிகள் இருந்தாலும், நம்மை பொறுத்தவரையில், பாஜகவில் மட்டும்தான் கட்சியின் ஆத்மா தலைவர்களிடம் இல்லை. அது தொண்டர்களிடம்தான் உள்ளது. பாஜக மட்டுமே ஆத்மாவாக உள்ளது. ஆனால், கட்சி ஊழியர்கள் இல்லாமல் பாஜக என்ற கட்சியை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். 

click me!