தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம்இருப்பது பெருமை.. படத்தை நீக்ககோரியவருக்கு நேர்ந்த கதி.. நீதிமன்றம் அதிரடி!

Published : Dec 23, 2021, 11:12 PM IST
தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம்இருப்பது பெருமை.. படத்தை நீக்ககோரியவருக்கு நேர்ந்த கதி.. நீதிமன்றம் அதிரடி!

சுருக்கம்

முதலில் பிரதமரை மதிக்க வேண்டும். வெளிநாடுகளில் இது போன்ற சான்றிதழில் பிரதமர் பற்றி பெருமிதம் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நம் பிரதமரை நாம் பெருமிதம் கொள்கிறோம்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க கோரியவருக்கு அபராதம் விதித்தது கேரள உயர் நீதி மன்றம்.

கொரோன தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்கக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பீட்டர் மியாலிபரம்பில் என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறுகிறது. இது தனிநபரின் உரிமையில் தலையிடுவதாக உள்ளது. எனவே, சான்றிதழில் மோடியின் படத்தை நீக்க உத்திரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பி.வி. குன்ஹி கிருஷ்ணன் விசாரித்தார். வழக்கு விசாரணையின்போது பிரதமரின் படம் இருப்பதில் என்ன பிரச்சினை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பில், “பிரதமர் அரசியல் சாசனப்படியும், ஜனநாயக முறைப்படியும் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். அரசியல் கட்சியின் அரசின் கொள்கைகளிலோ அதன் நிலைபாட்டினிலோ வேறுபடலாம். ஆனால், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் இருப்பதற்கு குடிமக்கள் வெட்கப்படத் தேவையில்லை. முதலில் பிரதமரை மதிக்க வேண்டும். வெளிநாடுகளில் இது போன்ற சான்றிதழில் பிரதமர் பற்றி பெருமிதம் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், நம் பிரதமரை நாம் பெருமிதம் கொள்கிறோம். 

விசாரிப்பதற்கு முக்கியமான வழக்குகள் பல உள்ளன. இந்த சூழலில் தேவையில்லாத மனுக்களை ஊக்குவிக்க முடியாது. இது மிகவும் அபத்தமான அரசியல் உள்நோக்கம் கொண்ட மனு. மக்கள் நலன் பற்றி அக்கறை இல்லாத விளம்பரத்துக்காக தாக்கல் செயப்பட்ட மனு. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்வதோடு, அரசியல் உள்நோக்கத்துடன் தேவையற்ற மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாக” நீதிமன்றம் உத்தரவிட்டது. “அபராதத்தை 6 வாரங்களுக்குள் கேரள மாநில சட்ட சேவை ஆணையத்தில் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் மனுதாரரின் சொத்துக்களை விற்று அபராதத் தொகையை ஆணையம் வசூலிக்கலாம்” என்றும் நீதிபதி  தீர்ப்பளித்தார். 

PREV
click me!

Recommended Stories

நள்ளிரவு வரை தொடர்ந்த தர்ணா.. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VB-G RAM G மசோதா
விசா தேதி முடிந்தால் தங்க முடியாதா? அமெரிக்கா செல்லும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை!