
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் ஷகிபாபாத்தில் திருமண மண்டபம் களை கட்டியிருந்தது. மாப்பிள்ளை உடை அணிந்து மணமகன் கம்பீரமாக இருந்தார். மாப்பிள்ளைக்கு 3 லட்சம் வரதட்சணையும் வைர மோதிரமும் பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 லட்சம் வரதட்சணை தந்தால்தான் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று மணமேடையில் வைத்து கேட்டுள்ளார் மாப்பிள்ளை. இதனால் மணமகளின் உறவினர்கள், மாப்பிள்ளையை சமாதானப்படுத்த முயன்றனர். எவ்வளவு கெஞ்சியும் காசு இல்லாமல் தாலி கட்டவே முடியாது என்று மறுத்துள்ளார் மாப்பிள்ளை.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து பொங்கி எழுந்த , மணமகளின் பெற்றோர், உறவினர்கள், மாப்பிள்ளை என்றும் பார்க்காமல் அடித்து துவைத்துள்ளனர். மாப்பிள்ளை உடையிலேயே மணமகன் தர்ம அடி வாங்கியுள்ளார். மணமகனின் உறவினர் பெண் ஒருவர் தான், அவரை காப்பாற்ற முயன்று மாப்பிள்ளையை அடிப்பதை அங்குயிருந்தவர்கள் நிறுத்தவில்லை. அடித்த அடியில் மணமகன் கதி கலங்கிப் போனார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாப்பிள்ளையை வித்தியாசமான முறையில் மணமகள் வீட்டார் திருப்திபடுத்தியதாகவும் , மணமகள் வீட்டாரின் செயல் நியாயமானதே என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.