கல்வி நிதிக்கு யார் பொறுப்பு? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published : Sep 01, 2025, 03:37 PM IST
supreme court

சுருக்கம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏற்படும் செலவுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும் பொறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏற்படும் செலவுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இரண்டும் பொறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கல்வி நிதி விவகாரம்

கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த மாணவர்களின் கல்விச் செலவை மத்திய, மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது ‘சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தின் ஒரு பகுதி. ஆனால், 2021-22 மற்றும் 2022-23 கல்வி ஆண்டுகளுக்கான தனது பங்கான ரூ. 342.69 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்நிலையில், ஜூன் 10, 2025 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கல்வி உரிமைச் சட்டச் செலவுகளுக்கு முழுப் பொறுப்பும் தமிழக அரசுக்கே உண்டு என்று கூறியது. இது தமிழக அரசுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என தமிழக அரசு வாதிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிறப்பு விடுப்பு மனு (Special Leave Petition) தாக்கல் செய்தார்.

"கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கல்விக்கான நிதிப் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுக்கும் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இந்த அம்சத்தை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது.

2025-26 கல்வி ஆண்டுக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தவறு.

2021-22 மற்றும் 2022-23 கல்வியாண்டுகளில் மத்திய அரசின் பங்களிப்பு கிடைக்காததால், தமிழக அரசு ரூ. 314.98 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது" என்று வாதிட்டார்.

மேலும், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நிதி விடுவிப்பு, தேசிய கல்விக் கொள்கை-2020 உடன் (NEP-2020) இணைக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டது. இந்த விவகாரங்களையும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வில்சன் கொண்டு சென்றார்.

நீதிமன்றத்தின் முடிவு

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, தமிழக அரசின் மனுவை ஏற்றுக்கொண்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் வழக்குத் தொடுத்தவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!