செத்த எலியை வாயில் வைத்து போராடும் தமிழக விவசாயிகள்! காவிரி நீரைத் திறக்குமா கர்நாடகா?

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்துத் திறந்துவிடக் கோரி தமிழக விவசாயிகள் செத்த எலிகளைக் கவ்வி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே நடந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு காவரி நீரைத் திறந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தி கர்நடாக விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி திருச்சியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். தினமும் விதவிதமான முறையில் தங்கள் போராட்டத்தை நடத்திவரும் அவர்கள் இன்று தங்கள் வாயில் செத்த எலியை கவ்விக்கொண்டு கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

Latest Videos

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்துத் திறந்துவிடக் கோரி தமிழக விவசாயிகள் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்! ராணுவ வீரரைத் தாக்கி முதுகில் PFI என எழுதிய மர்ம கும்பல்!

 

இதனிடையே கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கன்னட அமைப்பினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்துக்கு நெற்றியில் பொட்டு வைத்து மாலை அணிவித்து போராட்டம் நடத்திவருகிறார்கள். மு.க.ஸ்டாலின் படத்தின் முன்பு ஒப்பாரி வைத்து இறுதிச் சடங்குகள் செய்துள்ளனர்.

முழு அடைப்பு காரணமாக திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்கிழமை நள்ளிரவு வரை பெங்களூரு நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா தெரிவித்துள்ளார். இதனால், பெங்களூரு சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கர்நாடக மாநிலம் மாண்டியாவிலும் மளவள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சங்கத்தினர் பைக் பேரணி நடத்தினர்.

ஆட்டோ ஓட்டுநர்கள், பெங்களூரு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட போக்குவரத்துக் அமைப்புகளும் இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. ஓலா, உபெர் போன்ற தனியார் வாடகை கார் நிறுவனங்களும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியுள்ளன.

இச்சூழலில் இன்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், செப்டம்பர் மாதம் திறக்கவேண்டிய 7 டிஎம்சி நீரைத் திறந்துவிட உத்தரவிடுமாறு தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு பதில் கூறிய கர்நாடக தரப்பு, போதிய மழை இல்லாததால் தண்ணீர் திறக்கமுடியாத நிலை இருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

click me!