அலர்ட் !! திருப்பதி வருடாந்திர பவித்ரோற்சவம்..ஆன்லைன் டிக்கெட் எப்போது வெளியீடு..? தேவஸ்தானம் அறிவிப்பு

Published : Jul 30, 2022, 11:02 AM IST
அலர்ட் !! திருப்பதி வருடாந்திர பவித்ரோற்சவம்..ஆன்லைன் டிக்கெட் எப்போது வெளியீடு..? தேவஸ்தானம் அறிவிப்பு

சுருக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பவித்ரோற்சவத்திற்கான டிக்கெட்,  ஆகஸ்ட் 1-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமஞ்சன சேவையிலும், நிறைவு நாள் பூர்னாஹுதியிலும் பக்தர்கள் கலந்துக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க:Sevvai Peyarchi: ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் தலைவிதி தலைகீழாய் மாறும்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடைபெறும் இந்தாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வருடாந்திர பவித்ரோற்சவத்தின் போது, அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களைய சிறப்பு யாகம் நடத்தப்படும். அதனை தொடர்ந்து நடைபெறும் உற்சவருக்கான திருமஞ்சன சேவையிலும், நிறைவு நாள் பூர்னாஹுதியிலும் பக்தர்கள் கலந்துக்கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:Sani: சனியின் வக்ர பெயர்ச்சி..அடுத்த 5 மாதம் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள் ..உங்கள் ராசி இதுவா..?

எனவே வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி இதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி தேவஸ்தான இணைய தளம் மூலம் 2,500 ரூபாயை செலுத்தி பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் உற்சவத்திற்கு வரும் பக்தர்கள், சேவைக்கான டிக்கெட் மற்றும் அடையாள அட்டையுடன், சம்பிரதாய உடை அணிந்து வரவும் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!
Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!