அடேங்கப்பா.. ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? இதோ முழு லிஸ்ட்!

Published : Jul 30, 2022, 09:30 AM IST
அடேங்கப்பா.. ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? இதோ முழு லிஸ்ட்!

சுருக்கம்

ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் தொடங்க உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு விடுமுறை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், வங்கிகளுக்கான விடுமுறைக் காலண்டரில் ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 18 நாட்கள் விடுமுறையும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் தொடங்க உள்ள நிலையில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு விடுமுறை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், வங்கிகளுக்கான விடுமுறைக் காலண்டரில் ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 18 நாட்கள் விடுமுறையும் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

வங்கிகள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பென்சன் உள்ளிட்ட பல்வேறு அவசிய சேவைகளுக்கு வங்கி முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட காலண்டரில் ஆகஸ்ட் மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து 18 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. மாநிலங்கள் மற்றும் நகரங்களை பொறுத்து வங்கி விடுமுறைகள் மாறுபடும். இருப்பினும் ஆன்லைன் வங்கிச் சேவை தொடர்ந்து செயல்படும். அவற்றில் எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை நாட்கள்

ஆகஸ்ட் 1: ருப்கா ஷி ஜி நாளையொட்டி காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 7: முதல் ஞாயிற்றுக்கிழமை

ஆகஸ்ட் 8: ஜம்மு ஸ்ரீநகரில் முகரம் பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 9: முகரம் பண்டிகையையொட்டி, அகர்தலா, அகமதாபாத்,ஏய்ஸ்வால், பெலாபூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹெதராபாத், ஜெய்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர்,டெல்லி , பாட்னா, ராய்பூர், ராஞ்சி ஆகிய நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 11: ரக்ஸாபந்தன் பண்டிகையொட்டி வங்கிகள், அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்பூர், ஷிம்லாவில் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 12: கான்பூர், லக்னோவில் ரக்ஸாபந்தன் நாளையொட்டி விடுமுறை

ஆகஸ்ட் 13: தேசப்பற்று தினம் மணிப்பூரில் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இம்பால் நகரில் வங்கிகளுக்கு விடுறை(2வது சனிக்கிழமை)

ஆகஸ்ட் 14: 2-வது ஞாயிற்றுக்கிழமை

ஆகஸ்ட் 15: சுதந்திரதினம் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 16: பார்சி இனத்தவர்களுக்கான புத்தாண்டு என்பதால், பெலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 18: ஜென்மாஸ்டமி  என்பதால், புவனேஷ்வர், டேராடூன், 

ஆகஸ்ட் 19: கிருஷ்ண ஜெயந்தி என்பதால், அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்பூர், ஜம்மு,  பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 20: ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்திக்காக வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 21: 3-வது ஞாயிற்றுக்கிழமை 

ஆகஸ்ட் 27: 4-வது சனிக்கிழமை

ஆகஸ்ட் 28: 4-வது ஞாயிற்றுக்கிழமை

ஆகஸ்ட் 29: ஸ்ரீமாந்த சங்கர்தேவா திதி என்பதால் கவுகாத்தியில் வங்கிகளுக்கு விடுமுறை

ஆகஸ்ட் 31: விநாயகர் சதுர்த்தி, வங்கிகளுக்கு விடுமுறை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு
Gold Price: மோடி சொன்ன மாதிரி தங்கம் வாங்காம இருந்தா என்ன ஆகும்? எத்தனை பேர் வாழ்க்கை கேள்விக்குறியாகும்?