மாற்றுத் திறனாளிகள், தீராத நோய் உடையவர்களுக்கு வழங்குவது போன்று, வழுக்கை தலை உடைய எங்களுக்கும் மாதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் இல்லையென்றால் போராட்டம் வெடிக்கும் என்று தெலங்கானாவில் வழுக்கை தலை உடையவர்களுக்கான சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் ஏற்படும் சத்து குறைபாடு மற்றும், அசுத்த ரத்தத்தின் காரணமாக பலருக்கும் தலையில் வழுக்கை விழுவது இயல்பு தான். அதிலும் தற்போது இளம் தலைமுறையினர் பலரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் வழுக்கை தலை உடையவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சங்கம் ஒன்றை தொடங்கி உள்ளனர். இந்த சங்கம் சார்பில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்க்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப் பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவில், “வழுக்கை தலை உடைய நாங்கள் சமூகத்தில் பல பிரச்சனைகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றோம்.
தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு; நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
குறிப்பாக இளம் வயதில் வழுக்கை ஏற்படும் நபர்கள் தங்களுக்குள்ளாகவே தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதுபோன்ற பிரச்சினை உள்ளவர்களால் இயல்பாக இருக்கும் 4 பேருடன் இணைந்து பொது வெளியில் வருவதே மிகவும் சவாலானதாக உள்ளது. வழுக்கை தலை உடையவர்களுக்கு திருமணமாவதும் மிகவும் சிரமமான விசயமாக உள்ளது. இதனால், இவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி; தச்சன்குறிச்சியில் சீறிப்பாய்ந்த காளைகள்
எனவே மாற்றுத் திறனாளிகள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் மாதம் அரசு உதவித் தொகை வழங்குவது போன்று எங்களுக்கும் மாதம் தலா ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். வருகின்ற பொங்கல் பண்டிகைக்குள் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் எங்கள் சங்கத்தின் சார்பில் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்பட்டு தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.