
புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்கள் கடந்த 8 ஆம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து கடந்த 10-ம் தேதி முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன.
இதனிடையே, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நவம்பர் 14 -ம் தேதி வரை பெட்ரோல் பங்குகள், மருத்துவமனை, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சில இடங்களில் மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்றுடன் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்றே கடைசி நாள் என ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், தற்போது நவம்பர் 24 ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகள் மற்றும் அரசு சேவைகளுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்ளலாம் என மத்திய அரசு கால அவகாசம் அளித்துள்ளது.