நாளை முதல் ரூ.1000 ஃபைன்... ஆதார்-பான் கார்டை இணைக்காதவர்களுக்கு சிக்கல்!!

By Narendran SFirst Published Jun 30, 2022, 11:07 PM IST
Highlights

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் இது நாளை முதல் செயல்பாட்டுக்கு வருவதாகவும் மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது. 

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் இது நாளை முதல் செயல்பாட்டுக்கு வருவதாகவும் மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்திய நாட்டின் குடிமகன் ஒவ்வொருவரும் தனது பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த இரு எண்களை இணைப்பதற்கு 2022 மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஆனால் பலர் இணைக்காமல் இருந்ததால் அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் பான் ஆதார் எண்களை இணைக்காமல் இருந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி மத்திய அரசு அறிவித்தது.

இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிரான ஜிஹாத் அறிக்கையை திரும்பப் பெறுங்கள்… மம்தாவுக்கு மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!!

இருந்த போதிலும் மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு, ஜூன் 30 ஆம் தேதிக்குள்ளாக இணைப்பவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய நேரடி வருமான வரித்துறை அறிவித்தது. மேலும், ஜூலை முதல் தேதியிலிருந்து இந்த அபராதம் ஆயிரம் ரூபாயாக வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தது. ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு அல்லது ஜூன் 30 ஆம் தேதி வரை ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்பிறகும், நிரந்தர கணக்கு எண்ணையும் ஆதாரையும் இணைக்காதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே… துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு!!

இந்த அபராதத் தொகையை செலுத்திய பிறகே, முடக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இணைக்காவிட்டால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, பான் கார்டு செயலற்றதாக ஆக்கப்படும். அதன் பிறகு அந்த எண்ணை எதிலும் பயன்படுத்த இயலாமல் போய்விடும் என்றும், கடந்த மார்ச் 30ம் தேதியன்று வருமான வரி துறை அறிவித்திருந்தது. இதன் மூலம் நாளை முதல் அபராதம் இரு மடங்காக உயர்கிறது என்பது தெரியவருகிறது.

click me!