43வது ஆண்டில் பாஜக… நாட்டின் மிகப்பெரிய கட்சியானது எப்படி? விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு!!

By Narendran S  |  First Published Apr 6, 2023, 5:37 PM IST

43வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பாஜக நாட்டின் மிகப்பெரிய கட்சியானது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 


43வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பாஜக நாட்டின் மிகப்பெரிய கட்சியானது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. சியாமா பிரசாத் முகர்ஜியால் இந்து தேசியவாத கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங் நிறுவப்பட்டது. பின்னர் 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர். 1984 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பாஜக வெளிப்படையாகக் கண்டித்தது.

இதையும் படிங்க: சமஸ்கிருதம் தெரிந்துகொண்டால், மற்ற மொழிகளை கற்பது எளிது! - டாக்டர் நூரிமா யாஸ்மின் சாஸ்திரி!

Tap to resize

Latest Videos

அப்போது பாஜக-விடம் 2 நாடாளுமன்ற இடங்கள் இருந்தன. பின்னர் தனது கொள்கைகளால் இந்திய அரசியலில் பாஜக முக்கிய இடத்தைப் பிடித்தது. 1990ல் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1996 தேர்தலில், பாஜக நாட்டின் மிகப்பெரிய கட்சியாக மாறியது. 1999 தேர்தலில் அடல் பிஹாரி வாஜ்பாய் 24 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 5 ஆண்டுகள் நீடித்தது. மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்தது.

இதையும் படிங்க: டெல்லி சென்று பாஜகவில் இணைந்தார் ஏ.கே. அந்தோணி மகன் அனில் அந்தோணி!

2019 ஆம் ஆண்டில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 2019ல் பாஜக 38 சதவீத வாக்குகளைப் பெற்றது. மூன்றில் ஒருவர் பாஜகவுக்கு வாக்களித்தனர். 2023ல் 15 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மேலும் 2024ல் பாஜக 350 இடங்களை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது உலகில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பாஜக பான் இந்திய கட்சி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

click me!