உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரேதசத்தில் உள்ள 13 தங்கச் சுரங்கங்களை இந்த மாதத்தில் மத்தியஅரசு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரேதசத்தில் உள்ள 13 தங்கச் சுரங்கங்களை இந்த மாதத்தில் மத்தியஅரசு விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுரங்கத்துறையின் பங்களிப்பை ஊக்கப்படுத்த இந்த முடிவை மத்திய அரசு எடுக்க இருப்பதாகத்த தெரிகிறது.
ஷிவமோகாவில் பதற்றம்:கத்திக்குத்து சம்பவத்தில்ஒருவர் மீது போலீஸார் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது
ஆந்திரப்பிரதேசத்தில் 10 இடங்களில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இதில் 5 சுரங்கங்களை மட்டும் வரும் 26ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. மற்ற 5 சுரங்கங்கள் வரும் 29ம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் ராமகிரி நார்த்பிளாக், பொகசம்பள்ளி நார்த்பிளாக், பொகசம்பள்ளி சவுத்பிளாக், ஜவகுலா-ஏபிளாக், ஜவகுலா-பி பிளாக், ஜவகுலா-சி பிளாக், ஜவகுலா- டி பிளாக், ஜவகுலா-இ விளாக், ஜவகுலா- எப் பிளாக் ஆகியவை விற்கப்பட உள்ளது.
இந்த தங்கச்சுரங்கங்களை விற்பனை செய்வது குறித்து ஏற்கெனவே கடந்த மார்ச் மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இப்படித்தான் டோமினோஸ் பீட்ஸா தயாரிக்கிறாங்களா! ருசியின் ரகசியம் இதுவா
உத்தரப்பிரதேசத்தில் உள்ள தங்கச் சுரங்கங்களும் இந்த மாதத்தில் விற்கப்படுகின்றன. இருப்பினும் அதற்குரிய தேதி அறிவிக்கப்படவில்லை. சோனாபஹாரி பிளாக், துருவா-பியாதந்த் பிளாக், சோன்பத்ரா பிளாக் ஆகியவை விற்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த மே 21ம்தேதி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 45 கனிவளங்கள் மண்டலம் உ.பி. அரசால் ஏலம் விடப்பட்டன. கடந்த 4ம்தேதி மட்டும் 199 கனிவளங்கள் மண்டலங்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த ஏலத்தால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நல்ல வருவாய் பங்கீடு கிடைக்கும்.