kashmir: 32 ஆண்டுகளுக்குப்பின் ! சினிமா பார்க்கத் தயாராகும் மக்கள்: ஸ்வாரஸ்யத் தகவல்

By Pothy RajFirst Published Sep 20, 2022, 4:21 PM IST
Highlights

32 ஆண்டுகளுக்குப்பின் ஒரு மாநிலத்தின் மக்கள் திரையரங்குக்கு சென்று சினிமாப் பார்க்கப் போகிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதா. இந்த ஸ்வரஸ்யமான சம்பவம் காஷ்மீரில் நடக்க உள்ளது.

32 ஆண்டுகளுக்குப்பின் ஒரு மாநிலத்தின் மக்கள் திரையரங்குக்கு சென்று சினிமாப் பார்க்கப் போகிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறதா. இந்த ஸ்வரஸ்யமான சம்பவம் காஷ்மீரில் நடக்க உள்ளது.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் 32 ஆண்டுகளுக்குப்பின் மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த திரையரங்கை லெப்டினென்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா முறைப்படி திறந்து வைத்தவுடன் இம்மாதம் 30ம் தேதி முதல் மக்கள் இந்த திரையரங்கில் சினிமா பார்க்க உள்ளனர்.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வருகிறது ஆப்பு: தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை

32 ஆண்டுகள் காத்திருப்புக்குப்பின் ஸ்ரீநகர் மக்கள் திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்க்க உள்ளனர். 
இந்தத் திரையரங்கு ஸ்ரீநகரில் உள்ள மிகவும் பாதுகாப்பு நிறைந்த ஷிவ்போரா பகுதியில், ஐநாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.

இந்த திரையரங்கில் மொத்தம் 520 பேர் அமர்ந்து படம் பார்க்க முடியும். இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மொத்தம் 3 திரையரங்குகள் உள்ளன, முதலில் 2 திரையரங்கும், அதன்பின் வரவேற்பைப் பொறுத்து 3வது திரையரங்கம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திலிருந்து 3வது திரையரங்கம் செயல்படும் எனத் தெரிகிறது.

திரையரங்கின் மேலாளர் விஜய் தார் கூறுகையில் “ அமீர் கான் நடித்த லலா சிங் சத்தா முதலில் திரையிடப்படும். அதன்பின் ஹிர்திக் ரோஷன், சைப் அலிகான் நடித்த விக்ரம் வேதா திரைப்படமும் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் அதிகம் இருக்கும் பகுதியில் புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை லெப்டினென்ட்கவர்னர் மனோஜ் சின்ஹா திறந்து வைத்தார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர், அசோக் கெலாட் போட்டி? ராகுல் இல்லையா?

ஜம்மு காஷ்மீரில் திரையரங்குகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று கடந்த 1990களில் தீவிரவாதிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. கடந்த 32 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீரில் ஒரு திரையரங்கு கூட இல்லை, மக்களும் திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்க்காமலே இருந்தார்கள்.

ஸ்ரீநகரின் சோனாவார் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் அகமது கூறுகையில் “ கடந்த 32 ஆண்டுகளுக்குமுன் ஸ்ரீநகரில் திரையரங்கில் திரைப்படம் பார்த்தேன். அதன்பின் இதுவரை பார்த்து இல்லை. அவ்வாறு திரைப்படம் பார்க்கவேண்டுமென்றால், காஷ்மீரை விட்டு சென்று வேறுமாநிலத்தில் சென்று குடும்பத்துடன் திரைப்படம் பார்ப்போம். காஷ்மீரில் பொழுதுபோக்கிற்கு சில இடங்கள்தான் உள்ளன. மீண்டும் திரையரஹ்கு வருவது மக்களை சுந்திரமாக வெளியே வர வைக்கும்” எனத்தெரிவித்தார்

click me!