‘செல்பி’ புகழ் குரங்குக்கு இந்த ‘ஆண்டின் தலைசிறந்தவர்’ பட்டம்

First Published Dec 6, 2017, 9:08 PM IST
Highlights
This is the title of The Best of the Year for the monkey fame monkey


செல்பி எடுத்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற இந்தோனேசியா  குரங்குக்கு, இந்த ஆண்டின் தலைசிறந்தவர் பட்டத்தை பீட்டா அமைப்பு வழங்கியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள ‘பிளாக் மக்காகியு’ வகையைச் சேர்ந்த ‘நாருட்டோ’ என பெயரிடப்பட்ட இந்த குரங்கு அந்த செல்பியை எடுத்தது.

இந்தோனேசியா

கடந்த 2011ம் ஆண்டு இந்தோனேசியாசின் சிலாவசி தீவுக்கு சென்ற இங்கிலாந்து புகைப்படக் கலைஞர் டேவிட் சிலேட்டர், ‘நாருட்டே’ குரங்கிடம் தனது கேமிராவைக் கொடுத்தார்.

செல்பி

அப்போது, அந்த குரங்கு எதார்த்தமாக கேமிராவின் பட்டனை அழுத்தி செல்லி எடுத்தது. இந்த புகைப்படம் சர்வதேச அளவில் இணையதளத்தில் வைரலாகப் பரவி பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.

வழக்கு

இதையடுத்து, விலங்குகள் நல அமைப்பான பீட்டா இந்த செல்பி புகைப்படத்துக்கு உரிமையாளர் 6வயதான ‘நாருட்டோ’ குரங்குதான். அந்த புகைப்படத்துக்கு காப்புரிமையை அந்த குரங்கிடம் அளிக்க வேண்டும், அதை உரிமையாளராக அறிவிக்க  வேண்டும் எனக் கூறி அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரணை நீண்ட காலமாக நடந்து வந்தது. புகைப்பட கலைஞர் டேவிட், இந்த புகைப்படத்தின் உரிமை தனக்கே சொந்தம், குரங்கிடம்தன்னுடைய கேமிரா மூலமே புகைப்படம் எடுக்கப்பட்டது எனக் கூறி வாதாடினார்.

25 சதவீதம்

இந்நிலையில், நீண்ட காலம் நடந்த வாதங்களுக்கு பின், அந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் டேவிட் சிலேட்டர் சமரசத்துக்கு வந்தார்.  எதிர்காலத்தில் குரங்கின் செல்பியை வர்த்தக ரீதியாக பயன்படுத்தினால், அதில் 25ச தவீதத்தை இந்த  ‘பிளாக் மக்காகியு’ இன குரங்குகளை பாதுகாக்க வழங்குகிறேன் என டேவிட் சிலேட்டர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

உரிமை, காப்புரிமை

இது குறித்து பீட்டா அமைப்பின் நிறுவனர் இன்கிர்க் நெவ்கிரிக் கூறுகையில், “ வரலாற்று சிறப்பு மிக்க குரங்கு எடுத்த செல்பி, யாருக்கு சொந்தம், யார் சிந்தனையில் உருவானது என்பது குறித்த காப்புரிமை தொடர்பான வழக்கில் தீர்வு கிடைத்துள்ளது. விலங்கினம் ஒன்று புகைப்படத்தின் உரிமை, காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இதையடுத்து, இந்த ஆண்டின் சிறந்தவராக அந்த குரங்கை அறிவிக்கப்பட்டது’’ எனத் தெரிவித்தார்.

click me!