இந்தோனேஷியா சென்று அவசரமாகத் திரும்பும் பிரதமர் மோடி! காரணம் என்ன தெரியுமா?

By SG Balan  |  First Published Sep 6, 2023, 6:38 PM IST

இந்தோனேஷியா செல்லும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள், சந்திப்புகள் போன்ற பயணத் திட்டம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.


பிரதமர் மோடி இன்று, அமைச்சர்கள் குழுக் கூட்டத்திலும், கேபினெட் அமைச்சரவைக் கூட்டத்திலும் பங்கேற்றார். தனது இந்தோனேஷியா பயணத்தை முன்னிட்டு இரவு 7:30 மணி வரை மீண்டும் கூட்டங்களில் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளார். பின், ஜகார்த்தாவுக்குச் தன் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஜகார்த்தாவுக்கு புறப்படுவார். அவர் சுமார் 7 மணிநேரம் விமானத்தில் பயணித்து செப்டெம்பர் 7ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஜகார்த்தா சென்றடைவார்.

Tap to resize

Latest Videos

இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு அவர் ஆசியான் இந்தியா உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று உச்சிமாநாட்டில் பங்கேற்பார். காலை 8:45 மணிக்கு, அவர் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பார்.

இந்த மாநாடுகள் முடிந்த முடிந்த உடனேயே, பிரதமர் மோடி நாடு திரும்புகிறார். காலை 11:45 மணிக்கு டெல்லிக்கு விமானத்தில் கிளம்பும் அவர், மாலை 6:45 மணிக்கு தலைநகர் டெல்லியை மீண்டும் வந்தடைவார்.

செப்டம்பர் 8ஆம் தேதி, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச உள்ளார். பைடன் உள்ளிட்ட மூன்று நாடுகளின் தலைவர்களுடன் முக்கியமான இருதரப்பு சந்திப்புகளை பிரதமர் நடத்த இருக்கிறார்.

click me!