ஜி20 உச்சி மாநாடு: பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை!

By Manikanda Prabu  |  First Published Sep 6, 2023, 4:46 PM IST

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, டெல்லியில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது


ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏரளமான தலைவர்கள், பிரதிநிதிகள் டெல்லிக்கு வரவுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லி விழா கோலம் பூண்டுள்ளது. டெல்லி முழுவதுமே பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டையொட்டி பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, டெல்லியில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி, “ஜி20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.” என்றார்.

Tap to resize

Latest Videos

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு: டெல்லியில் முதல் கூட்டம்!

அதேசமயம், ஜென்மாஷ்டமியை முன்னிட்டு டெல்லியில் ஏற்கனவே செப்டம்பர் 7ஆம் தேதி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின் மூலம், செப்டம்பர் 7 முதல் 10ஆம் தேதி வரை தலைநகர் டெல்லியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜி20 மாநாட்டுக்கு கல்வி துறை ஊழியர்களின் உதவி தேவைப்படும் பட்சத்தில், அவர்கள் டெல்லியிலேயே தங்கியிருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கூடுதலாக, அனைத்து ஊழியர்களும் தொலைபேசி மூலம் அணுகப்பட வேண்டும் என்றும், அவர்களின் சேவைகள் தேவைப்படலாம் என்பதால், இந்த காலகட்டத்தில் வெளியூர் விடுமுறைகள் வழங்கப்பட மாட்டாது என்றும் டெல்லி அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!