கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த இந்திய நகரம்: என்ன காரணம்?

By Manikanda Prabu  |  First Published Feb 5, 2024, 1:59 PM IST

பெரும்பாலானோருக்கு விருப்ப உணவாக இருக்கும் காலிஃபிளவர் கொண்டு செய்யப்படும் கோபி மஞ்சூரியனுக்கு இந்திய நகரம்  ஒன்று தடை விதித்துள்ளது


உணவு ஆர்வலர்களின் விருப்ப உணவாக கோபி மஞ்சூரியன் இருக்கிறது. சிவப்பு வண்னத்திலான சைனீஸ் சாஸ் ஊற்றி காலிஃபிளவர் பூக்களில் கோபி மஞ்சூரியன் செய்யப்படுகிறது. டேஸ்ட் அட்லஸ் எனும் ஆன்லைன் உணவு இதழ் பட்டியலிட்ட சிறந்த சைவ உணவுகளில் இந்தோ - சைனீஸ் உணவான கோபி மஞ்சூரியன் முக்கிய இடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், பெரும்பாலானோருக்கு விருப்ப உணவாக இருக்கும் கோபி மஞ்சூரியனுக்கு இந்திய நகரம்  ஒன்று தடை விதித்துள்ளது. கோவா மாநிலத்தை சேர்ந்த மாபுசா நகரம் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளது. கோபி மஞ்சூரியனில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் சுகாதாரம் தொடர்பான கவலைகள் எழுப்பப்படுவதால் கோபி மஞ்சூரியனுக்கு மாபுசா நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Latest Videos

undefined

தமிழ்நாட்டிற்கு உதவ வேண்டும்: ஸ்பெயின் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

கோபி மஞ்சூரியனுக்கு முதன்முதலாக தடை விதிப்பது மாபுசா நகர நிர்வாகம் அல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டில், ஸ்ரீ தாமோதர் கோவிலில் வாஸ்கோ சப்தா கண்காட்சியின் போது, கோவா மாநிலத்தின் மோர்முகாவ் முனிசிபல் கவுன்சிலுக்கு கோபி மஞ்சூரியன் விற்கும் ஸ்டால்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தல்களை உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாகம் வழங்கியது. அதற்கு முன்பு கோபி மஞ்சூரியனை கட்டுப்படுத்தும் வகையில், அவை விற்கப்படும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சிக்கன் மஞ்சூரியனுக்கு மாற்றான சைவ உணவாக கோபி மஞ்சூரியன் உள்ளது. அசைவம் சாப்பிடாத பலரும், சிக்கன் மஞ்சூரியனுக்கு பதில் கோபி மஞ்சூரியனை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். சீன வம்சாவளியான இந்தியாவை சேர்ந்த சமையல் கலைஞர் நெல்சன் வாங் என்பவர் 1970 களில் சிக்கன் மஞ்சூரியனை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். சீன சமையல் கலைஞர் நிபுணரான இவர், இந்திய கிரிக்கெட் கிளப்பில் உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, புதுமையான உணவை கண்டுபிடிக்கும் முயற்சியில், சிக்கன் மஞ்சூரியனை கண்டுபிடித்துள்ளார்.

click me!