காசி, மதுராவையும் விட்டுக் கொடுத்தால் கோயில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி: கோவிந்த் தேவ் கிரி மகராஜ்

By SG Balan  |  First Published Feb 5, 2024, 1:03 PM IST

"ராமர் கோவில் கட்டுவதற்கு நாங்கள் ஒரு அமைதியான தீர்வைக் கண்டோம். அத்தகைய சகாப்தம் தொடங்கியுள்ளதால், மற்ற பிரச்சினைகளும் அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.


அயோத்திக்குப் பின் காசி மற்றும் மதுராவையும் அமைதியான முறையில் மீட்டெடுத்தால், வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட மற்ற கோவில்கள் தொடர்பான பிரச்சனைகளில் இந்து சமூகம் விட்டுக்கொடுக்கும் என ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மகராஜ் கூறியுள்ளார்.

புனேவின் புறநகரில் உள்ள ஆலந்தியில் நடைபெற்ற கோவிந்த் தேவ் கிரி மகராஜின் 75வது பிறந்தநாள் விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவையிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்த் தேவ் கிரி மகராஜ், சுமார் 3,500 இந்துக் கோயில்கள் வெளிநாட்டுத் தாக்குதல்களால் இடிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

Latest Videos

undefined

"அயோத்திர, காசி, மதுராவில் உள்ள மூன்று கோவில்களும் விடுவிக்கப்பட்டால், மற்றவற்றைப் பார்க்கக்கூட நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் நாம் கடந்த காலத்தில் அல்ல, எதிர்காலத்தில் வாழ வேண்டும்" என்று அவர் கூறினார்.

அமைதியான தீர்வுக்கான சாத்தியம் குறித்து நம்பிக்கை தெரிவித்த கோவிந்த் தேவ் கிரி மகராஜ், காசி மற்றும் மதுராவை மீட்பதற்கான கோரிக்கையை ஆதரிக்குமாறு முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த விவகாரத்தை இரு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினையாகப் பார்க்காமல், கடந்த கால தாக்குதல்களின் அறிகுறிகளை அகற்றும் முயற்சியாக பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"ராமர் கோவில் கட்டுவதற்கு நாங்கள் ஒரு அமைதியான தீர்வைக் கண்டோம். அத்தகைய சகாப்தம் தொடங்கியுள்ளதால், மற்ற பிரச்சினைகளும் அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.

முஸ்லீம் சமூகத்தில் பலர் காசி மற்றும் மதுரா தொடர்பாக அமைதியான தீர்வுக்கு தயாராக உள்ளனர் என்று கூறிய அவர், அமைதியற்ற சூழலை உருவாக்காமல் அமைதியான முறையில் தீர்வு காண்பதை உறுதிசெய்ய பேச்சுவார்த்தை அவசியம் என அவர் தெரிவித்தார்.

click me!