காதலனுடன் தன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்; குவியும் பாராட்டுக்கள்

 
Published : May 31, 2018, 12:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
காதலனுடன் தன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்; குவியும் பாராட்டுக்கள்

சுருக்கம்

this husband let his wife to marry her lover

கான்பூர் கிராமத்தை சேர்ந்த சுஜித் என்பவருக்கும், அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் சாந்தி என்பவருக்கும், சில மாதங்களுக்கு முன் பெற்றொர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி சாந்தி சுஜித்துடன் விருப்பமின்றியே வாழ்ந்திருக்கிறார். அதன் பிறகு தனது வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர், திரும்பி வரவே இல்லை.

இதனால் கோபமான சுஜித், சாந்தியின் வீட்டிற்கே சென்று என்ன நடந்தது? என விசாரித்திருக்கிறார். அப்போது அவரிடம் பேசிய சாந்தி, தான் இவ்வாறு நடந்துகொள்ள காரணம் என்ன என விளக்கி இருக்கிறார்.

திருமணத்திற்கு முன் அவர் ரவி என்பவரை காதலித்திருக்கிறார். இது தெரிந்ததும் சாந்தியின் பெற்றோர் அவரை சுஜித்துக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால் மனம் ஒன்றாமல் இப்படி எல்லாம் செய்திருக்கிறார் சாந்தி.

இதை அறிந்ததும் சுஜித் சாந்தியை அவரின் காதலனுடன் சேர்த்துவைத்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்த திருமணத்திற்கு சாந்தியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் சுஜித்.

இது குறித்து சுஜித் பேசிய போது, முதலில் நான் ஏமாற்றப்பட்டதை நினைத்து எனக்கு கோபம் தான் வந்தது. ஆனால் பொறுமையாக யோசித்த போது, இப்படி செய்வது தான் சரி எனப்பட்டது. அதனால் தான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தேன். என தெரிவித்திருக்கிறார் சுஜித் .

சுஜித்தின் இந்த செயலை பார்த்து வியந்து அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்