
பதஞ்சலி குழுமம் வியாபரச் சந்தையில் எல்லா விதமான வீட்டு உபயோகப் பொருள்களையும், இயற்கையான முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சுதேசி பொருட்கள் என்பதனாலும், விலை நியாயமாக இருப்பதாலும் பதஞ்சலி பொருட்களுக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த வெற்றியை மனதில் கொண்டு தற்போது பதஞ்சலி குழுமத்தின் யோகா குரு ராம் தேவ் பதஞ்சலி நேற்று புதிய சிம் கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தினார். ”சுதேசி சம்ரிதி” எனப்படும் அந்த சிம் கார்டுகளை, பி.ஏஸ்.என்.எல் உடன் இணைந்து வெளியிட்டிருக்கிறார் ராம் தேவ். அன்லிமிட்டட் கால் மற்றும் 2ஜிபி டேட்டா என, புது ஆஃபர்களுடன் வந்திருக்கும், இந்த சிம் கார்ட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
தற்போது ராம் தேவ் ”கிம்போ” எனும் அப்ளிகேசனையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த அப்ளிகேசன் கிட்டத்தட்ட வாட்ஸ் அப் போலவே செயல்படும். ராம் தேவ் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த ”கிம்போ” அப்ளிகேசனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து, தரவிறக்கம் செய்து பயன் படுத்தி கொள்ளலாம்.
இது குறித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டிருக்கும் பதஞ்சலியின் மக்கள் தொடர்பாளர் “ இந்த கிம்போ அப்ளிகேசன் வாட்ஸ் அப்-க்கு சவாலாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்”.