திருவாரூர் இடைத்தேர்தலுக்கு உறுதியானது ஆப்பு...! நாளை மறுநாள் விசாரணை..!

By vinoth kumarFirst Published Jan 5, 2019, 4:43 PM IST
Highlights

திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. டி.ராஜா, மாரிமுத்து உள்ளிட்ட 3 பேர் மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. 

திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு மீதான விசாரணை திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. டி.ராஜா, மாரிமுத்து உள்ளிட்ட 3 பேர் மனு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. 

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து ஜனவரி 28-ம் தேதி அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி திருவாரூர் தொகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா, ரத்தினகுமார் ஆகிய 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்திருந்தனர். 

மனுவில் கூறியிருப்பதாவது: கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம் தேர்தல் அறிவிக்கப்படாமல் திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கூறியுள்ளார். இடைத்தேர்தலின் போது முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

இதனையடுத்து அவர்களின் 3 பேர் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. 
 
இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை எப்படி உள்ளது என்பது குறித்த அறிக்கையை இன்று மாலைக்குள் அளிக்கும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டிருந்தார். இன்று நடைபெற்ற அனைத்து கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்த பிறகு தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. ஆகையால் திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.  

click me!