உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு...! அகிலேஷ், மாயாவதி அதிரடி!!

By Asianet TamilFirst Published Jan 5, 2019, 10:38 AM IST
Highlights

உத்தரப்பிரதேசத்தில் திடீரென காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட்டு சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோத்துள்ளன. இதுதொடர்பாக டெல்லியில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் சந்தித்து பேசினார்கள்.

மெகா கூட்டணி அமைக்க முயற்சி செய்த காங்கிரஸ் கட்சியின் கனவில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மண்ணை போட்டுவிட்டன.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. பாஜகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு  நாயுடுவும் காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி நடத்திய ஒரு சில எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி, மெகா கூட்டணியில் இருப்பதுபோல காட்டிக்கொண்டன.  

ஆனால், உத்தரப்பிரதேசத்தில் திடீரென காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட்டு சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோத்துள்ளன. இதுதொடர்பாக டெல்லியில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் சந்தித்து பேசினார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளையும் சமமாகப் பிரித்துக்கொண்டு போட்டியிடுவது என இருவரும் முடிவு செய்துள்ளார்கள். 

அதேசமயம் ராகுல் காந்தி வென்ற அமேதி தொகுதி, சோனியா காந்தி வென்ற ரேபரேலி தொகுதியில் இந்த இரு கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தாமல் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் என்றும் தகவல்கள் கூறுகிறன. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தலைமையை இரு கட்சிகளு கைகழுவிவிட்டன. பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் முயற்சிக்கு ஆப்பு வைத்திருக்கின்றன இரு கட்சிகளும்.

click me!