Vande Bharat Express Train Accident Today:வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறையாக மாடுகள் மீது மோதி விபத்து

Published : Oct 29, 2022, 02:27 PM IST
Vande Bharat Express Train Accident Today:வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறையாக மாடுகள் மீது மோதி விபத்து

சுருக்கம்

குஜராத் காந்தி நகர்- மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறையாக இன்று கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. 

குஜராத் காந்தி நகர்- மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறையாக இன்று கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. 

அக்டோபர் மாதத்தில் மட்டும் நடக்கும்3வது விபத்து இதுவாகும். இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி பேனல் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தால் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு காந்திநகர் சென்றது

4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில் “ மும்பையில் இருந்து காந்தி நகருக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று வந்தது. காலை 8.20 மணி அளவில் அடுல் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, இருப்புப் பாதை குறுக்கே வந்த கால்நடைகள் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: இருப்பு பாதையில் எருமை மாடுகளை மேயவிட்ட உரிமையாளர் மீது வழக்கு

இதில் ரயிலின் முன்பகுதி பேனல் உடைந்து சேதமானது. ரயிலின் அடிப்பகுதியிலும் சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தால் 20 நிமிடங்கள் தாமதமாக காந்திநகருக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது. விபத்தால் ரயில் இயக்குவதில் சிக்கல் இல்லை, 20 நிமிடங்கள் தாமதம் மட்டும் ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தார்கள்” எனத் தெரிவித்தார்

இந்த மாதத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்குவது 3வது முறையாகும். கடந்த 6ம்தேதி வட்வா மணிநகர் இடையே, காந்திநகர்-மும்பை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 6 எருமை மாடுகள் உயிரிழந்தன. 

2வது முறையாக எருமை மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்.. அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் !

அதன்பின் அக்டோபர் 7ம் தேதி 2வது விபத்து நேர்ந்தது. காந்தி நகரில் இருந்து மும்பைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்றபோது, ஆனந்த் பகுதியில் பசு மாடு மீது விபத்துக்குள்ளானது. இப்போது 3வதுமுறையாக விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

பெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு ஆப்பு! சம்பளத்தில் கை வைக்கும் அரசு! முதல்வர் அதிரடி சரவெடி
சீனாவுக்கு பாகிஸ்தான் கொடுத்த இல்லீகல் 'கிஃப்ட்'..! இந்தியாவிற்கு புண்ணாக மாறிய வஞ்சகம்..!