Azam Khan :சமாஜ்வாதி ஆசம் கான் எல்எல்ஏ பதவி பறிப்பு: உ.பி. சட்டப்பேரவையிலிருந்து நீக்கம்: காலியிடமாக அறிவிப்பு

By Pothy RajFirst Published Oct 29, 2022, 12:47 PM IST
Highlights

சமாஜ்வாதிக் கட்சி எம்எல்ஏ ஆசம் கான் மீதான வெறுப்புப் பேச்சு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, உத்தரப்பிரதேச சட்டப்பேரவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

சமாஜ்வாதிக் கட்சி எம்எல்ஏ ஆசம் கான் மீதான வெறுப்புப் பேச்சு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, உத்தரப்பிரதேச சட்டப்பேரவையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

உ.பி. சட்டப்பேரவை செயலாளர் இந்த உத்தரவை நேற்று பிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் ஆசம் கான் தொகுதியான ராம்பூர் சாதர் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

இது திணிப்பு அல்ல; வெறும் பரிந்துரை மட்டுமே... பிரதமர் மோடி கூறுவது என்ன?

2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத், ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எதிராக சமாஜ்வாதி எம்எல்ஏ ஆசம் கான் வெறுப்பை உண்டாக்கும் வகையில் மக்கள் மத்தியில் பேசினார். இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் கடந்த இரு நாட்களுக்கு முன் ராம்பூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “ ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறையும், 2ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றதால் ஆசம் கானின் எம்எல்ஏ பதவி பறிக்கப்படும் சூழல் இருந்தது. 

சட்டப்பிரிவு 370 ரத்து காரணமாக காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் குறைந்துள்ளது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

இந்நிலையில் ஆசம் கான் எம்எல்ஏ பதவியை பறித்தும், சட்டப்பேரவை உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யு சட்டப்பேரவை செயலாளர் பிரதீப் துபே நேற்று உத்தரவிட்டார்

சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் பிரதீப் துபே அளித்த பேட்டியில் “ மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஒருவர் 2 ஆண்டுகளுக்குமேல் தண்டனை பெற்றால், அவர் வகிக்கும் எம்எல்ஏ பதவியை இழந்துவிடுவார், அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது.

அந்த வகையில், ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்எல்ஏ பதவியை இழந்துவிட்டார், சட்டப்பேரவையிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் அவர் போட்டியிட்ட ராம்பூர் சதார் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

:டாடா ஏர்பஸ் விமான திட்டம் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு ஏன் மாற்றம்?ஆதித்யா தாக்கரே கேள்வி

உ.பி. துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியா ட்விட்டரில் ப திவிட்ட கருத்தில் “ ஆசம் கான் எம்எல்ஏ பதவியை பறித்த சபாநாயகர் சதீஷ் மகானா முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ராம்பூர் தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் அங்கு தாமரை மலரும்” எனத் தெரிவித்தார்.


 

click me!